ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்து!

அமெரிக்காவில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள ஷாருக்கான் அவர்கள் சென்றிருந்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார்.ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயமானது ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியவண்ணம் உள்ளன.காயம் ஏற்பட்டதால் மேற்கொண்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் இந்தியாவிற்கு திரும்பிவிட்டார். அவர் தற்போது மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version