சிட்னி மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் பேசிய 6 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
சிட்னி:
இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 நாள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறது. இந்த நிலையில், 4 வது நாள்(இன்று) இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோர் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது இனவெறியை தூண்டும் வகையில் அவர்களை ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
Read more – ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தி : தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரிழந்த வாலிபர்
இந்திய வீரர்களை குறிவைத்து பார்வையாளர்கள் சிலர் பேசியதை சிராஜ் கவனித்து பந்துவீசுவதை நிறுத்தினார். அதன் பின்னர் நடுவர் மற்றும் சக வீரர்களிடம் இந்த தகவலை அவர் தெரிவிக்க சிட்னி மைதானத்தில் இருந்து இனவெறியை தூண்டும் வகையில் பேசிய 6 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், இனவெறியை தூண்டும் வகையில் பேசுவோர் மீது இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.