IPL தொடரிலிருந்து விலகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பியது ஏன் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பாண்டு IPL தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. அதனால் அனைத்து வீரர்களும் துபாய் கிளம்பி சென்றனர் அவர்கள் அனைவரும் அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணத்திற்காக இந்தியா திரும்பியதாக சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து அவர் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும்தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் சி.எஸ்.கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனிடையே அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா உயிரிழந்ததால்தான் அவர் இந்தியா திரும்பினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பதன்கோட்டில் தரியால் என்ற கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பத்தினர் ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு, அவர்களது வீட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில் சுரேஷ் ரெய்னாவின் தந்தை சகோதாரி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் தலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதனால் தான் சுரேஷ் ரெய்னா தாயகம் திரும்பியுள்ளார்.