அடிலெய்டு மைதானம் அமைந்துள்ள தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தில் உள்ளது.
அடிலெய்டு:
இந்திய கிரிக்கெட் அணி 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் செய்து முற்றிலும் வீரர்களை பாதுகாப்பான முறையில் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு அடுத்த மாதம் விளையாட இருக்கிறார்கள்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் மைதானத்தில் அடுத்த மாதம் 17 ம் தேதி தொடங்குகிறது.ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆஸ்திரேலியா நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்ததால் ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அடிலெய்டு மைதானம் அமைந்துள்ள தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தில் உள்ளது.ஆனால் இதை முற்றிலும் மறுத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்ட் நாங்கள் திட்டமிட்டபடி அனைத்து போட்டிகளும் நடக்கும் எனவும்,அனைத்தும் நிகழ்வுகளையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.என்றது,மேலும் இந்தியா மற்றும்ஆஸ்திரேலியா அணிகளுக்கான இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அடிலெய்டு மைதானத்தில் தான் நடக்கும் என்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்ட் தெரிவித்துள்ளது.