டி20 உலக கோப்பை ஒத்திவைப்பு – ஐசிசி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி20 ஆண்கள் உலக கோப்பை 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு வெளிப்படையாக கடந்த மாதமே தெரிவித்தது. ஆனால் ஐசிசி அதன்பின் இரண்டு முறை கூடியது. அப்போது டி20 உலக கோப்பை குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், போட்டியை ஒத்திவைப்பதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஐசிசி டி20 உலக கோப்பை 2021-ல் அக்டோபர் – நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 14-ல் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், 2022-ம் ஆண்டு டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 26-ந்தேதி நடைபெறும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

Exit mobile version