எங்ககிட்ட கேப்டன் மட்டுமே 11 பேர் இருந்தாங்க,”சின்ன தல”வெளியிட்ட சிஎஸ்கே ரகசியம்!!

இந்த ஆண்டின் ஐ.பி.எல்-க்கு முன்னால், சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா எங்கள் அணி அணி நல்ல  தலைமை பண்பு உள்ளவர்கள்  மற்றும் மிகச் சிறந்த தலைவர்களால்  எப்பொழுதுமே நிரம்பியுள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய பேட்ஸ்மேன், ரெய்னா  ஐ.பி.எல். இல் சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு மிகச் சிறந்த தலைவர்களின் முன்னிலையே காரணம் என்று கூறினார். 

சென்னையை களமாக கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வகையான போட்டிகளில்  வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளைப் பெறும் அணிகளில் ஒன்றாகும்.

அவர்கள் இதுவரை மூன்று பட்டங்களை வென்றுள்ளனர் மற்றும் தொடக்க காலத்திலிருந்தே  ஒவ்வொரு ஆண்டும் பிளேஆஃப்களில் இடம் பிடித்த ஒரே அணி சிஎஸ்கே தான்  நடுவில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் 2016 மற்றும் 2017 சீசனை தவறவிட்டாலும். 

அவர்கள் விளையாடிய பத்து சீசன்களில், எட்டு முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளனர்.

மூன்று முறை சாம்பியன்கள் மற்றொரு சீசனுக்கு(IPL2020)  தற்போது அணிவகுத்து வருவதால், சுரேஷ் ரெய்னா அணியின் தலைமை குறித்து  பெருமிதம் கொண்டுபேசினார்.  எங்க டீம்ல இல்லாத கேப்டனா  நம்ம  தல ய விடுங்க அது வேற லெவல் அவரை தவிர்த்து பார்த்தீங்கன்னா  மொத்தம் அணியில் பதினோரு கேப்டன் ஆடி இருக்காங்க ,என்று சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம் கூறினார்.அவங்க எப்பவுமே எங்கள் வழி  காட்டிட்டு தான் இருப்பாங்க

“எங்கள் அணியில், எல்லோரும் கேப்டன் தான் இந்த பக்கம் பிராவோ  வழிநடத்துகிறார், ஃபாஃப்    டூப்லெஸி இருக்கிறார், அஸ்வின்  இருந்தப்ப ஒரு பக்கத்தை வழிநடத்தினார்  இருக்கவே இருக்கு நம்ம தல எம்.எஸ் எப்போதும் கூடவே இருப்பாரு.  அப்புறம் நான் கூட இருக்கேன், நான் இந்தியாவையும் ஐ.பி.எல்.ல கூட கேப்டன்சி பண்ணிருக்கேன்.

 அதனால எங்ககிட்ட மொத்தம் பதினொரு கேப்டன்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்,  ஆனா கூட எங்க எல்லாத்தையும் விட ஸ்டம்பின் பின்னால் இருந்து பெரிய படத்தை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்த ஒரு தல மேலே அமர்ந்திருக்கிறார், ”என்று சுரேஷ் ரெய்னா  தோனி இருக்கும் இடத்தை நோக்கி கையை காட்டினார்.

ஆகவே, எங்கள் அணி கிரிக்கெட்டில் ஒரு சிறந்த பல்கலைகழகம் போல் அனுபவம் உள்ளவர்கள் இருந்து இருக்கிறார்கள்.

 அதற்கும் மேல் கேப்டன் ஃப்ளெமிங், அவர் நியூசிலாந்தை வழிநடத்தினார் சிறந்த கேப்டனாக இருந்தார். எங்கள் அணியை சேர்ந்த  மைக்கேல் ஹஸ்ஸி, மத்தேயு ஹேடன்,  அவர்கள் ஐ.பி.எல். இல் ஆதிக்கம் செலுத்தினார்ங்கள், அதிலும்   ஹேடன் தனது மங்கூஸ் மட்டையை கொண்டு வந்தார்.  அதிலும் பல சாதனைகளை நிகழ்த்தினார் என்றார் .

Exit mobile version