அடடே! இது என்ன புது ட்விஸ்ட்டு :நடிகையாக மாறுகிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா

பொதுமக்களின் நலனுக்காக காசநோய் விழிப்புணர்வு தொடரில் நடிகையாக அவதாரம் எடுக்கிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

மும்பை:

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிக் மாலிக் மனைவியுமான சானியா மிர்சா நடிகையாக புது அவதாரம் எடுக்க இருக்கிறார். காசநோய் விழிப்புணர்வு தொடரில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து சானியா மிர்சா கூறியதாவது: நம் நாட்டில் இருக்கும் பெரும் நோய்களில் மிகவும் முக்கியமான நோய் காசநோய்.இந்த காசநோயால் பாதிக்கப்பட்டு,தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களில் பாதிக்கு பாதி 30 வயதுக்கு உள்பட்டவராகவே இருக்கின்றனர்.

தொடர்ந்து அந்த நோயை சுற்றி பரவும் தவறான கருத்துகளை மாற்றும் செய்வது மிகவும் முக்கிய அவசர தேவையாக இருந்து வருகிறது.எனவே காசநோய் தொடர்பான தொடரில் நடிக்க இருக்கிறேன்.நான் நடிக்கும் இந்த தொடரானது மனதிற்கு மிகவும் அழுத்தமாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். நம் நாட்டைப் பாதிக்கும் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து பொதுமக்களை பயமுறுத்தி வரும் இந்த காசநோய் பற்றிய விழிப்புணர்வுகளை இந்த தொடரின் மூலம் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.இவ்வாறு கூறினார்.

Exit mobile version