ஐசிசியின் விருது பட்டியல் வெளியீடு : “ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்” விருதை வென்ற தோனி

ஐசிசியின் “ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்” விருதை தோனிக்கு வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

டெல்லி,

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது கொடுக்கப்பட்டுள்ளது. 2011 நாட்டிங்கமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இயன் பெல் ரன் அவுட்டில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தினால் முதலில் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

அப்போது அவர் 137 ரன்களை எடுத்திருந்த அவர் மீண்டும் விளையாட அப்போதைய இந்திய கேப்டன் தோனியால் அழைக்கப்பட்டு பெல் மீண்டும் களமிறங்கி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைத்தது.அணி தோல்வி அடைந்ததற்கு விமர்சனங்கள் வந்தாலும் அவரின் அணுகுமுறை அந்த சமயத்தில் பெரிதும் பேசப்பட்டது.

Read more – இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் : ஒத்திகை தொடக்கம்

இந்த நிலையில், தோனியின் அந்த முடிவுக்கு தற்போது பெரும் விருது கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த  கடந்த பத்து வருடத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் “ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்” என்ற  சிறந்த உத்வேக வீரருக்கான விருதை தோனிக்கு வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இந்த விருதிற்கு ரசிகர்கள் போட்டியின்றி தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version