இந்தியா வரலாறு காணாத வெற்றி : 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்தியா

சுப்மான் கில் மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

பிரிஸ்பேன் :

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. விராட் கோலி தலைமையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கான 3 வது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்த நிலையில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன் எடுத்தது. 2 வது இன்னிங்சிஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் வார்னர் 48 ஹரிஸ் 38, ஸ்மித் 55 ரன்கள் எடுக்க, அதன் பின்னர்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி 294 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சிராஜ் 5 விக்கெட்களையும், தாகூர் 4 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.

Read more – பவானி அருகே தீண்டாமை கொடுமையால் கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை : நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் புகார்

327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் துணை கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக விளையாடிய புஜாரா அரை சதம் கடந்து கம்மின்ஸ் பந்தில் LBW முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேற, சுந்தர், ரிஷப் பண்ட் உடன் இணைந்து சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தார்.

கடைசி 7 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 7-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 6 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. 29 பந்தில் 21 ரன்கள் சுந்தர் எடுத்த நிலையில், தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தார். கடைசி நான்கு ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹசில்வுட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் ஷர்துல் தாகூர் ஆட்டமிழக்க கடைசி பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரிஷப் பண்ட் 89 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

Exit mobile version