தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு அனுமதி!!!

உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களில் பயிற்சிக்கான தடை தொடர்கிறது.

சென்னை: தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருமண மண்டபங்கள், பெரிய வணிக வளாகங்கள், பூங்காங்கள்,நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  ஜப்பானில் இந்த மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள், தேசிய, மாநில, மாவட்ட அளவிலான அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து வகையான விளையாட்டு பயிற்சி கூடங்களும் கடந்த 3 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளது. சிரமம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டு வீரர், வீரங்கனைகள்  ஒவ்வொரு நாளும் காலை, மாலை என 2 மணி நேரம் பயிற்சி பெறுகின்றனர். தற்போது மைதானங்கள்,ஜிம்,கிளப்புகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால் பயிற்சி பெற முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால்,பெரும்பாலான வீரர்,  வீராங்கனைகள் மன அழுத்தத்தில் உள்ளனர்.

இதனைபோல், தனியார் பள்ளிகளில் பலவகையான விளையாட்டு மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் பள்ளிகளில் பகுதிநேர பணிக்கு சென்று வந்தனர்.இவர்களுக்கு  பள்ளிகள் மூடப்பட்டதால்,வருவாய் கிடைக்காமல் அவதியில் உள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம்.

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 15 வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்கு மேலான வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களில் பயிற்சிக்கான தடை தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

Exit mobile version