ஒரு மணி நேரத்தில் எல்லாமே முடிந்து விட்டது : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தோல்வி குறித்து கோலி வேதனை

வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை என்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தோல்வி குறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

அடிலெய்டு:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது.அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 191 ரன்களில் முதல் இன்னிங்சை முடித்தது.

அதன்பிறகு நேற்று 2 வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் பிரித்திவி சாவின் விக்கெட்டை பறிகொடுத்து அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து இந்திய அணி 36 ரன்களில் சுருண்டது.90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2 வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றி பெற்றது.

இதுகுறித்து,இரண்டு நாட்கள் சிறப்பாக விளையாடி போட்டியில் ஒரு நல்ல நிலையில் இருந்தோம். ஆனால், ஒரு மணி நேரத்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்து விட்டோம். இன்று இன்னும்கூட பேட்டிங்கில் தீவிரம் காட்டியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Read more-காங்கிரஸ் கட்சியில் எந்த பதவி வழங்கினாலும் ராகுல் காந்தி ஏற்க தயார் : காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா

மேலும் அவர் முதல் இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா இதே வகையான பந்துவீச்சைத்தான் வெளிப்படுத்தினார்கள்.ஆனால், இன்று நாங்கள் ரன்கள் சேர்க்கும் அவசரத்தில் தோல்வியை சந்தித்தோம்,உண்மையில் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.இன்று(நேற்று) அடைந்த தோல்வியில் நிறைய கற்றுக்கொண்டு அணி வீரர்கள் அடுத்த ஆட்டங்களில் சிறப்பாக ஆடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.

Exit mobile version