பெங்களூர் தோல்வியுடன் வெளியேற்றம்… ஹைதராபாத் வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..

வில்லியம்சனின் நிதான அரை சதத்தால் பெங்களூர் அணிக்கு எதிரான வெளியேற்று சுற்றில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2020 SRH vs RCB Live Score Playoffs Eliminator Live Updates: Twin  strikes leave RCB four down; De Villiers holds fort - Sportstar - Sportstar

அபு தாபி:

முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து பெங்களூர் அணி சார்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் பட்டிகல் களமிறங்கினர்.ஆரம்பம் முதல் சற்று தடுமாறிய பெங்களூர் அணி ஹோல்டரின் சிறப்பான பந்து வீச்சால் தொடக்க வீரர்களை சொற்ப ரன்களில் வெளியேற்றினார்.ஓரளவு நிலைத்து நின்று ஆடிய டி வில்லியர்ஸ் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தபோதிலும் ,மறுமுனையில் அடுத்தடுத்து பெங்களூர் அணி விக்கெட்களை இழந்தது.தொடர்ந்து அடித்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ்(56 ரன்கள்,43 பந்துகள்) நடராஜன் வீசிய 18 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆகி அதிர்ச்சியளித்தார்.நடராஜன் வீசிய கடைசி ஓவரில் சிராஜ் மற்றும் சைனி தலா ஒரு பௌண்டரிகள் விரட்ட,20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 56 ரன்களும்,பின்ச் 32 ரன்களும் எடுத்து இருந்தனர்.

ஹைதராபாத் அணியில் ஹோல்டர் 3 விக்கெட்களும்,நடராஜன் 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.

132 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி விக்கெட்டை பறிகொடுத்தது.அதன் பிறகு வந்த மனிஷ் பாண்டே அதிரடியை வெளிப்படுத்தி அசத்த,கேப்டன் வார்னர் மெல்ல வேகம் எடுத்து அடுத்தடுத்து பௌண்டரிகளை விரட்டினார்.சிராஜ் வீசிய 6 வது ஓவரில் டேவிட் வார்னர் 17 ரன்களில்,வெளியேற ,மனிஷ் பாண்டே ஆடம் ஜாம்பா வீசிய 9 வது ஓவரில் 24 ரன்களில் நடையைக்கட்டினார்.வில்லியம்சன் ஆரம்பம் முதலே பொறுமையாய் ஆடி ஹைதராபாத் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்த,6 பந்துகளில் 9 ரன்கள் ஹைதராபாத் அணிக்கு தேவையாக இருந்தது.சைனி வீசிய கடைசி ஓவர் முதல் பந்து வில்லியம்சன் 1 ரன் அடித்து அரைசதத்தை கடக்க,ஹோல்டர் 2 பௌண்டரிகளை ஓட விட்டு ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

ஹைதராபாத் அணியில் வில்லியம்சன் 50 ரன்களுடனும்,ஹோல்டர் 24 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

பெங்களூர் அணியில் சிராஜ் 2 விக்கெட்களும்,ஜாம்பா மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி அடுத்த தகுதி சுற்றில் டெல்லி அணியுடன் நேருக்கு நேர் சந்திக்க உள்ளது.இதில் வெற்றி பெறும் அணி நவம்பர் 10 ம் தேதி மும்பை அணியுடன் இறுதி போட்டியில் மோதுகிறது.

Exit mobile version