ரொம்பலாம் யோசிக்காதீங்க ரெய்னாவின் வேலையே இவர் பக்காவா செய்வார் – ஸ்காட் ஸ்டைரிஸ்

ரெய்னாவின் இடத்தில் பேட்டிங் செய்யும் வீரரைப் பற்றி அதிகம் யோசிக்க தேவையில்லை என்றும் இதற்கு இந்த வீரர்  சரியாக பொருந்துவார் என்று தெரிவித்திருக்கிறார் – ஸ்காட் ஸ்டைரிஸ்.

ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஏழு நாட்களே  இருக்கின்றன.  இத் தொடரின் முதல்  ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், கடந்த முறை பைனலில் கோட்டைவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  மோதுகின்றன. இந்த வருடம்  சாம்பியன் பட்டத்தை தொடர வேண்டும்  என்ற முனைப்புடன் மும்பை அணியும், விட்ட இடத்தை  பிடிக்க வேண்டும்  என  சென்னை அணியும்  தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தன் சொந்த  காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து  விலகி உள்ள சுரேஷ் ரெய்னாவின்  இடத்தை யார் நிரப்புவார்கள்  என்பதே தற்போது இணையத்தில் பேசுபொருளாக விவாதிக்கப்பட்டு  இருக்கின்றது.   இதில் சுரேஷ் ரெய்னாவின் இடத்தில்  யார்  எல்லாம் சரியாக இருப்பார்கள் என பல முன்னாள் வீரர்களும்  கருத்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்-  அதில்  இப்போது நியூசிலாந்து மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ்  இணைந்துள்ளார். ரெய்னாவின் இடத்தில் விளையாட சரியான நபர் குறித்த தனது கருத்தினை  வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர்  தெரிவிக்கையில்: ரெய்னாவின் இடத்தில் விளையாட நிச்சயம் அம்பத்தி ராயுடுவை  தேர்வு செய்யுங்கள் எனக்  கூறியுள்ளார்.

ராயுடு அங்கே விளையாடுவது தான் சரியானதாக இருக்கும் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.  ஏனென்றால் ரெய்னா அணியில் இல்லாதது டாப்   ஆர்டரில் ஏற்பட்ட பின்னடைவு தான்  எனினும்  அந்த இடத்தில் ராயுடு தன்னை நிலை நிறுத்திக்  விளையாடுவார்.  அவர் ஏற்கனவே 2018ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக  ஆடிய ஆட்டமே அதற்கு  சான்றாக உள்ளது.

 இதனால்,  மூன்றாமிடத்தில்  இவரால் நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும் என்று ஸ்காட் ஸ்டைரிஸ்  கூறியுள்ளார்.  இதே நேரத்தில் அனுபவ வீரரான ஹர்பஜன் சிங்கின் இழப்பு  அவ்வளவு பெரிய தாக்கத்தை  அணியில்ஏற்படுத்தாது என்றும்  இவருக்கு மாற்றாக நிறைய பவுலர்கள்  ஏற்கனவே சிஎஸ்கே அணியில்  உள்ளதாகும் அவர்  தெரிவித்துள்ளார். 

Exit mobile version