148 தேங்காய்களை ஒரே கையால் உடைத்து கின்னஸ் சாதனை

ஜெர்மனி நாட்டை சேர்ந்த தற்காப்பு கலைஞர் ஒருவர் தனது ஒரு கையால் 148 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த முஹம்மத் கஹ்ரிமனோவிக் (தற்காப்பு கலைஞர்) இத்தாலி தொலைக்காட்சி தொடரான லோ ஷோ டீ ரெக்கார்டின் மிலன் தொகுப்பில் 6வது முறையாக சாதனை படைத்துள்ளார்.

தனது கைகளால் எண்ணற்ற பொருட்களை உடைத்து உலக சாதனை புரிந்ததற்காக  ‘ஹேமர் ஹேண்ட்ஸ்’ என்ற செல்லப்பெயரை அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே 5 முறை சாதனை படைத்துள்ள அவர்  148 தேங்காய்களை தனது ஒரே கையால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்தார்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version