கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர 39 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் 40வது முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார்.
அமெரிக்காவில், டைலர் கோஹ்ன் என்பவர் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார். அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் விடாமுயற்சியாக தொடர்ந்து விண்ணப்பம் செய்து வந்தார். அவரின் விண்ணப்பம் 39முறை நிராகரிப்பு செய்யப்பட்ட நிலையில் 40வது முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு கூகுள் நிறுவனம் பணி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தான் கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிவுகளை தனது லிங்டின் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் முயற்சிக்கும் முட்டாள்தனத்திற்கும் இடையே ஒரு சின்னகோடுதான் இருக்கிறது. இதை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரை போன்று முன்னணி நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இவருக்கு வாழ்த்துகளை சொல்லி தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும், இவரின் விடாமுயற்சி பாராட்டுக்குறியதே.
-பா.ஈ.பரசுராமன்.