‘காலச்சுவடு’ பதிப்பக ஆசிரியர் கண்ணனுக்கு  ‘செவாலியே’ விருது அறிவிப்பு

காலச்சுவடு இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் பிரபல எழுத்தாளரான சுந்தர ராமசாமி, 1987ல்  ‘காலச்சுவடு’ எனும் காலாண்டு இதழை தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்கு பின் அது நிறுத்தப்பட்டது. பின் 1994ல் அவரது மகன் கண்ணன் சுந்தரம் மீண்டும் தொடங்கினார். படிப்படியாக அது மாத இதழானது. தீவிர இலக்கியம், சுற்றுச்சூழல், பெண்ணியம், மொழிப்பெயர்ப்பு உள்ளிட்டவை அந்த இதழில் வெளியாகின்றன. அதேநேரம் காலச்சுவடு பதிப்பகமும் இயங்குகிறது. அது இலக்கியம், சுற்றுச்சூழல், மொழிபெயர்ப்பு சார்ந்த நூல்களை பதிப்பித்து வருகிறது.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டுடன், இந்தியாவிற்கான நட்பு,கலாசாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டதற்காக, கண்ணனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version