ஆசியாவின்  பணக்காரப் பெண் இவர்தான்!

ஆசிய பணக்கார பெண்கள் பட்டியலில்சாவித்ரி ஜிண்டால் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆசிய பணக்கார பெண்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் (72) முதலிடம் பிடித்துள்ளார். இவரின் சொத்துமதிப்பு ₹89,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஜிண்டால் குழுமத் தலைவர் ஓ.பி.ஜிண்டால் கடந்த 2005ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அதன்பின் அக்குழுமத்தின் தலைவராக சாவித்ரி ஜிண்டால் இருந்து வருகிறார்.

இந்த பட்டியலில், முதலிடத்தில் இருந்த சீனாவின் யாங் ஹூயன் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளார். இரண்டாம் இடத்தில் சீனாவின் பென் ஹாங்கே உள்ளார்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version