சின்னக்குயில் சித்ராவுக்கு ‘பழசிராஜா’ விருது

சின்னக்குயில் சித்ராவுக்கு பழசிராஜா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல சினிமா பின்னணி பாடகி சித்ரா, தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 6  முறையும்,பத்மவிபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கேரளாவின் பழசி ராஜா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 16ம் தேதி கோழிக்கோடு தாகூர் மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பிரபல மலையாள இயக்குநர் எம்.டி.வாசுதேவன் இந்த விருதை வழங்குகிறார். பாடகி சித்ரா தலைமுறைகள் கடந்தும் இனிமையான பாடல்களை பாடியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Exit mobile version