கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தாயும்,மகனும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிந்து (42) அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இறுதிநிலை ஊழியருக்கான (எல்ஜிஎஸ்) தேர்வில் 92வது இடமும், இவரது மகன் விவேக் (24) கீழ்நிலை எழுத்தர் (எல்டிசி) தேர்வில் 38வது இடமும் பிடித்து அரசுப்பணியை பெற்றுள்ளனர்.
விவேக் 10ம் வகுப்பு படிக்கும்போது அவருடைய புத்தகங்களை படித்துவந்து பிந்து, பின் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து 4வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து பிந்து கூறுகையில், ”போட்டித் தேர்வு தயாரிப்பில் என்னுடைய மகனும், பயிற்சி வகுப்பு பயிற்றுநர்களும், நண்பர்களும் தேவையான ஊக்கத்தை வழங்கினர். இடைவிடாத முயற்சி இறுதியில் வெற்றி தரும் என்பதற்கு நான் ஓர் உதாரணம்.தோல்விகள் பல சந்தித்தாலும் இடைவிடாத முயற்சியின் மூலம் வெற்றி பெறமுடியும்” என்றார். இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் வருகிறது.