தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் பிரபல மென்பொறியியல் நிறுவனங்களில் பணியாற்றினாலும், வாழ்க்கைக்கு உத்வேகம் அளிக்கும் எழுத்துக்களால் சஹாதேவன் என்ற சஹாநாதன் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். அப்படி என்ன அவர் செய்து விட்டார் என்ற கேள்வி எழலாம். அவரை பற்றிய சில சுவாரசியமூட்டும் தகவல்களை தொலைக்காட்சி நேர்க்காணல்களும், கல்லூரிகளும் பகிர்ந்தாலும், தற்பொழுதுள்ள இளைஞர்கள் அவரை முழுவதுமாக தெரிந்து கொள்வது அவசியம் என்றே கூறலாம். ஏனெனில் வாழ்க்கையை வெறுப்பவர்களுக்கும், அடுத்தடுத்த தோல்விகளை சந்திப்பவர்களுக்கும், தொழில் முறை முன்னேற்றத்திற்கும் சஹா நாதனின் புத்தக படைப்புகள் ஒரு வரப்பிரசாதமாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை…
சென்னையில் பிறந்து வளர்ந்த சஹாநாதன் பொறியியல் மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த படைப்புகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். இந்தியாவில் கணினி துறையில் பணியாற்றி வந்த சஹாநாதனுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு தனது திறமையால் மென்பொருள் நிறுவனங்களின் மேற்பார்வையாளராக தடம் பதித்த சஹாநாதன், மக்களுக்கும் வருங்கால இளைஞர்களுக்கும் பயனுள்ள 16 புத்தகங்களை எழுதியுள்ளார். சுமார் 3500 படைப்பாளர்களை கொண்ட மணிமேகலை பிரசுரத்தின் முதல் 10 எழுத்தாளர்களில் சஹாதேவனும் ஒருவர். வாழ்க்கையின் நிதர்சனத்தை எடுத்துரைக்கும் இவரது அற்புத படைப்புகள் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேல் விற்பனையாகி உள்ளன.
நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் இவரது கட்டுரைகள், முன்னோர் சொன்ன வாழ்க்கை ரகசியங்கள், வீழ்ச்சி என்பது எழுச்சிக்கே, பிரச்சினைகள் ஜெயிப்பதற்கே, உங்களை வென்றால் உலகை வெல்லலாம், ஜெயிப்பதற்கு மட்டுமே வாழ்க்கை, உறவுகளை உருவாக்கும் கலை, நம்பிக்கைகளை விதைக்கும் கலை, the golden key for wellness, relationship solution -a spiritual way என சஹாநாதனின் அற்புத படைப்புகள் புத்தகங்களாக வெளியாகியுள்ளன. இவரின் customer relationship Management என்ற அதிசிறந்த புத்தகம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவின் 10 பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகமாக இருந்து வருகிறது.
புத்தகங்களை மட்டும் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாத சஹாநாதன் வாழ்வின் முன்னேற்றத்திற்கான கருத்துக்களை சஹாடிவி என்ற யூடியூப் சேனல் மூலம் மக்களுடன் பகிர்ந்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தனது பன்முக தன்மையை சித்த மருத்துவத்திலும், மனதிற்கு அமைதி தரும் ஆன்மிக போதனைகளிலும் சஹாநாதன் மலைச்சிகரமாய் மேலும் உயர்ந்துள்ளார்.
மக்களுக்கு பலனளிக்கும் விதமாக மனம், ஆன்மா, உடல் சார்ந்த 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை படைத்து பிறருக்கு ஊக்கமளித்து வருகிறார். இதோடு நின்று விடாமல் ரேடியோ நிகழ்வுகளில் பங்கெடுத்து மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு தனது சொற்பொழிவுகளை வழங்கி வருகிறார். சித்த மருத்துவ முறைகளையும் பகிர்ந்து நோயால் வாடும் மக்களுக்கு உதவி வருகிறார்.
பொறியியல் நிறுவனத்தின் மேற்பார்வையாளராக அமெரிக்காவில் பணியாற்றி வந்திருந்தாலும், வாழ்க்கைக்கான அற்புத படைப்புகளை புத்தகங்களாக வெளியிட்டதுடன், இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், சித்த மருத்துவ ஆராய்ச்சி, ஆன்மிக போதனைகள் என பன்முகங்களை கொண்ட சஹாதேவனை ஊடகங்களும் அரவணைத்து போற்றின. மதிமுகம், கலைஞர் தொலைக்காட்சி, நியூஸ்7 என ஊடகங்களில் தோன்றி மக்களுக்கு வாழ்வின் முன்னேற்றத்தை சஹாதேவன் பகிர்ந்து கொண்டார். தன்னலமின்றி சமுதாய நலனுக்காக செயல்பட்டு வரும் சஹா தேவன் போற்ற வேண்டிய மாமனிதர்.