புதுடில்லி: தேசிய தலைநகரில் வளர்ந்து வரும் சைக்கிள் ஓட்டுநரும் 9 ஆம் வகுப்பு மாணவருமான ரியாஸுக்கு இன்று தனது ” EID” பரிசு கிடைத்துள்ளது,
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ரியாஸ் குரு உலகத் தரம் வாய்ந்த சைக்கிள் ஓட்டுநராக வேண்டும் என்ற அவரதுகனவை அடைய உதவும் வகையில் ஒரு பந்தய சைக்கிளை பரிசளித்தார்.
டெல்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள சர்வோதய பால் வித்யாலயா மாணவர் ரியாஸ் பீகார் மாநிலம் மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அவரது குடும்பம் மதுபானியில் வசித்து வருகிறது, அதே நேரத்தில் ரியாஸ் காஜியாபாத்தில் உள்ள மகாராஜ்பூரில் ஒரு வாடகை விடுதியில் தங்கியுள்ளார் என்று ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல்காரர் ஆன தனது தந்தையின் அற்ப வருமானத்தை தன் கனவினை ஈடுசெய்ய முடியாததால், சிறுவன் காசியாபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பாத்திரங்கழுவி வேலை செய்கிறான்.
ரியாஸின் ஆர்வம் சைக்கிள் ஓட்டுதல், அவர் படிப்பு மற்றும் வேலைக்குப் பிறகு இதனை பயிற்சி செய்கிறார். 2017 ஆம் ஆண்டில், டெல்லி மாநில சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அவர் குவஹாத்தியில் நடந்த பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்றார் மேலும் தேசிய அளவில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
ரியாஸின் போராட்டக் கதையை ஊடகங்களில் வெளியான தகவல்கள் மூலம் ஜனாதிபதி அறிந்து கொண்டார்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உட்புற மைதானத்தில் தவறாமல் அவருக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் பிரமோத் ஷர்மாவிடம் இருந்து சிறுவன் தொழில்முறை பயிற்சி பெற்று வருகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, ரியாஸ் தனது பயிற்சிக்காக கடன் வாங்கிய ஒரு சாதாரண சைக்கிளை சார்ந்து இருக்க வேண்டியிருந்தது, மேலும் வளரும் சாம்பியன்ரியாஸ் விரும்பியதெல்லாம் ஒரு பந்தய சைக்கிள் தான். அவரது விருப்பம் இறுதியாக ஈத் சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது.
“தேசத்தைக் கட்டியெழுப்ப இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், ஒரு பந்தய சைக்கிளை பரிசாக வழங்குவதற்காக,கனவு காணும் ஒரு போராடும் பள்ளி சிறுவன் ரியாஸைத் தேர்ந்தெடுத்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.