செக்கிழுத்த செம்மல்,கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

‘கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம்  பிறந்த தினம் செப்டம்பர் 5:இன்று.  விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டியபெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் செயல்கள்.

வக்கீல்  வேலைகளில் பெரும்பொருள்  சம்பாதித்து கொண்டு இருந்தார் இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆட்டம் கண்டு போகும்.  ஏழைகளுக்காக இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் ஈர்க்கப்பட்டு நாட்டின்விடுதலைப்போரில்  பங்கெடுத்தார் வ.உ.சி.  இதனையடுத்து 1905-ஆம் ஆண்டுகாங்கிரஸ் இயக்கத்தில் தன்னை  சேர்த்து கொண்டு,  விடுதலை போராட்டத்தில்தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரின் பற்றால் அவரை ‘வந்தே மாதரம்  சிதம்பரம்  என்று  தலைவர்கள் அழைத்தார்கள்.

இந்தியாவை ஆங்கிலேயர்  சுரண்டிக்கொண்டு  மிரட்டிக்கொண்டு இருப்பதையும், வியாபாரத்தில்ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாட விடுவதையும் வ.உ.சி நன்றாக புரிந்து வைத்திருந்தார்.சுதேசி நாவாய்   எனும்சங்கத்தை  தோற்றுவித்தார். ஷாலேன் ஸ்டீமர்ஸ்கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு  வாங்கினார்.ஆங்கிலேய அரசு   தொடக்கத்திலேயே  முட்டுக்கட்டை  ஏற்படுத்தியது.  இங்கிருந்து கிளம்பிப்போய் கொழும்பில் இருந்துகப்பல்கள் வாடகைக்கு  வாங்கிக்கொண்டு வந்தார்.

இருந்தாலும் நம்  வியாபாரத்திற்காக ஒரு  சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியாஎனும் கப்பலை  வாங்கி  வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ்.எஸ். லாவோ” கப்பலையும்வாங்கி வந்தார்.  இதனால் ஆங்கிலேய அரசின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

ஆங்கிலேய அரசு விலையை குறைத்து ஈடு கொடுத்தது. இவரும் விட்டபாடில்லை  விலையை குறைத்து பார்த்தார்.  முடிவில்  கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்றுஅரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே  சென்றது.தொழிற்சங்கங்கள்  எல்லாம்  தமிழ்நாட்டில்    கால் பதிக்காத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று  செயல்படுத்தினார்.

வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓய்வில்லாமல் வேலை,விடுமுறையே  கொடுக்காத சூழல்ஆகியவற்றை   எதிர்த்து சுமார் ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம்  வெற்றிக் கொடி நாட்டினார்.இதற்கு பின் விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள்  செயல்படுத்தப்பட்டன. அப்பொழுதுதன்னுடைய  சொந்த பணத்தில்பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட முடிவு எடுத்ததும்  வ.உ.சி அதை  தங்கள் பகுதியில்கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர்வின்ச் பார்க்க  அவரை ழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க  முடியாது என்று தெரிவித்தார் உடனேவ உ சி கைது  செய்யப்பட்டார். 

இதனால் திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்துபாதித்தது, மற்றும் தொழில் ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சிஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டிஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டார்கள். ஆனால் ஆங்கிலேய அரசுசெவிசாய்க்கவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை  விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின்பிரசங்கத்தையும்  மகாகவி பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம்  கூட உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு  கூட ஐந்தே நிமிடங்களில்விடுதலை பெறும்” என்று  எழுதியிருந்தார். பின்னர் அந்த தண்டனை மேல்முறையீட்டுக்கு   சென்றது அதன்பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்துபுண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்தnமோசமான  உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்நோவதுவுங் காண்கிலையோ?’

என்று அவரின் உற்ற நண்பர்  மகாகவி பாரதியார் மனம் நொந்து  எழுதினார்.  சிறையிலிருந்து  விடுதலை அடைந்தது.

வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஒருவரும் இல்லை என்பது கசப்பான வரலாறு.அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையைவெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில்,”இந்நூலின்எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !” என்று தெரிவித்திருந்தார்.

லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர்சென்னைக்கு  பஞ்சம் பிழைக்க வந்தார்.மண்ணெண்ணெய் கடைஅமைத்துதெருத்தெருவாக போய் விற்று  பசியாற்றி கொண்டார்.

அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக

தன்   மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமையிலேயே வாழ்ந்து  இருந்த பொழுதிலும் உயிர் துறக்கும் பொழுது அவர்

மகாகவி பாரதியின் “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின்

மோகம்? ” என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர்  மல்க உயிர்   பிரிந்தார்.

Exit mobile version