17 வயது மாணவியை ஆசை வார்த்தைக்கூறி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு எய்ட்ஸ் இருந்தாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் (22). ஆட்டோ டிரைவராக இருந்து வரும் இவர் 11 ம் வகுப்பு மாணவியை கடந்த சில மாதங்களாக காதலிப்பது போல் நடித்து ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்றுள்ளார். மேலும், அந்த பெண்ணிற்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அந்த ஆட்டோ டிரைவரையும் மாணவியையும் நாகர்கோவிலில் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளனர்.
Read more – சீனாவில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து கத்திக்குத்து நடத்திய சைக்கோ : சுட்டு வீழ்த்திய காவல்துறையினர்
மேலும், பெற்றோரிடம் அந்த மாணவியை ஒப்படைத்து விட்டு, ஆட்டோ டிரைவர் ரதீஸை பிடித்து விசாரணை செய்ததில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு காவல்துறையினர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து அந்த ஆட்டோ டிரைவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.