2021 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில், அதிபாரக இருந்த டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 எலட்ரோல் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்ததால், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கும், திட்டங்கள் தீட்டுவதற்கும் கால அவகாசம் கொடுக்கப்படும். இதன்படி, அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்கயுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே, சட்ட விரோதமாக தேர்தல் முடிவுகள் இருப்பதாக கூறிவருகிறார் ட்ரம்ப். மேலும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஜோ பைடனை அதிபராக அங்கீகரிப்பதற்கான சான்றிதழ் வழங்கும் விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் விழா நடைபெற்ற நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்களும் துப்பாக்கி வைத்து தாக்கியதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்கள் கலையாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர்.
இந்நிலையில், போராட்டக்கரார்களை தூண்டும் வகையில் சமூக வலைதங்களில் கருத்து தெரிவித்திருந்தார் ட்ரம்ப். இதன் காரணமாக ட்ரம்பின் சமூக வலைதள கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு நாட்டின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு பொறுப்பேற்று ட்ரம்ப் அரசின் அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்துள்ளனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் எலானி சாவோ கல்வித்துறை அமைச்சர் தேவாஸ், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மாட் பொட்டிங்கர், மெலானியா ட்ரம்ப்பின் உதவி அதிகாரி ஸ்டெபானி கிரிஷாம், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு அமைச்சர் சாரா மாத்யூஸ், வெள்ளை மாளிகை சமூகப்பிரிவு அமைச்சர் ரிக்கி நிசிடா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். போராட்டங்கள் இன்றி அமைதியாக ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
