2021- 2022-க்கான மத்திய பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம்.
- காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக தாக்கல் செய்தார்.
- பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் கீழ் 27 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள்
- தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் 3,500 கிலோ மீட்டருக்கு சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படும்
- கொரோனா தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஒதுக்கப்படுகிறது.
- உள் கட்டமைப்பு வசதிக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயும் நகர்புறத் தூய்மைத் திட்டத்துக்கு 1.14 லட்சம் கோடியும், காற்று மாசு கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு 2,217 கோடியும் மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.
- சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- 100 புதிய சைனிக் பள்ளிகள், லே -யில் புதிய மத்திய பல்கலைக் கழகம், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள்
- அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- ஓய்வூதியம் மற்றும் வட்டி மூலம் மட்டுமே வருமானம் பெறும் 75 வயதை கடந்த முதியவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை
- 12.5 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான சுங்க வரி 10 சதவீதமாகக் குறைப்பு
- வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும்செல்போன் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு வரிச்சலுகை ரத்து.
- சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்கும் என அறிவிப்பு
- பேருந்து வசதிகள்மேம்பாட்டுக்கு 18,000 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு
- வேளாண் கடனுக்கு 16.5 கோடி இலக்கு நிர்ணயம்
- சென்னையில் 63000 கோடி ரூபாயில் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம்
- எல்.ஜ.சி பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு, 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாகிறது
- உஜ்வாலா திட்டத்தில் மேலும் 1 கோடி பேருக்கு இலவச கேஸ்
- 20 வருடங்கள் தனிநபர் பயன்படுத்திய வாகனங்கள், வர்த்தக நோக்கில் 15 ஆண்டு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை உடைக்கத் திட்டம்
- ஊரக வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.30,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
- வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்
- குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் 1.72 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
- மின் வினியோகத்துறையில் போட்டியை அதிகரிக்க, விரும்பும் நுகர்வோரிடம் இருந்து மின்சாரம் பெறும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.