‘சபாஷ் இந்தியா’-குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறந்த அளவில் மேற்கொள்ளப்படுவது நிரூபணமாகியுள்ளது.

கொரோனா உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு,அந்த நோயின் மீதான அச்சம் இன்னும் அகலவில்லை. இது வரை உலம் முழுவதும் 213 நாடுகளில் இந்த நோயால் சுமார் 3கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த முயற்சியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் குறைவாக இருந்தாலும்,கடந்த ஜூலை மாதம் முதல் மிகத்தீவிரமடைந்தது. அந்த ஒரு மாத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தில் இருந்து 57 ஆயிரமாக உயர்ந்தது.

இதையடுத்து பொதுமுடக்கத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியதோடு, நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் சுகாதரத்துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரும் தன்னலம் பாராமல் மிகக்கடுமையாக தங்கள் பங்களிப்பை கொடுத்தனர். அதன் விளைவு நோய் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. அதோடு நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ கண்காணிப்பு மற்றும் ஊட்டசத்து வழங்கல் போன்ற நடவடிக்கைகள் காரணமான நோய் தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் இந்திய மருத்துவத்துறை நேற்று வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் இதுவரை கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 46,74,988 எனத் தெரியவந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் 44,31,052, பிரேசிலில் – 40,23,789, ரஷியாவில் 9,29,829, கொலம்பியாவில் 6,74,961, பெரு நாட்டில் 6,36,489, தென் ஆப்ரிக்காவில் 5,95,916 என குணமடைந்தோர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இந்தியா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 ஆயிரத்து 19 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 87 ஆயிரத்து 66 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 91 ஆயிரம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி :சுரா

Exit mobile version