சமீபத்தில் ஜியோ நிறுவன மூட்டைகளில் அரிசி நிரப்புவது போன்று ஒரு புகைப்படம். கடந்த ஒரு மாதமாக தலைநகர் டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம். இந்த இரண்டு நிகழ்வுகளும் தற்செயலானது அல்ல. வேளாண் மசோதாவும் தற்செயலானது அல்ல. ஜியோ, பெரும் முதலாளிக்கு சொந்தமான ஒரு கார்ப்ரேட் நிறுவனம். எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்தியாவில் காலூன்ற முடியுமே அந்தந்த வழிகளில் எல்லாம் ஆழமாக காலூன்றி வருகிறது ஜியோ. ஏற்கனவே ஜியோ தொலைத்தொடர்பு சேவையால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. சில நிறுவனங்கள் தொலைந்தே போய்விட்டது. இதைத்தொடர்ந்து மக்களின் அன்றாட பொருட்கள் விற்பனையிலும் கால் வைத்து விட்டது ஜியோ.
இதற்கு முதலில், விவசாயிகள் ஏன் இவ்வளவு தூரம் விடாமல் போராடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். விவசாய மசோதாவின் படி, ஒரு கார்ப்ரேட் நிறுவனம் ஒரு விவசாயிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு விட்டால் அந்த நிறுவனம் நிர்ணயிப்பது தான் விலை. அதனால் விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டால் கூட நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. அந்த பொருட்களை வாங்கும் கார்ப்ரேட் நிறுவனம் என்ன செய்யும்? தங்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் தாங்கள் நிர்ணயம் செய்யும் விலைக்கு விற்கும். இதுல என்னங்க இருக்கு நம்ம சூப்பர் மார்க்கெட்டுக்கா யோய் வாங்க போறோம் என்று நீங்கள் கேட்கலாம். இங்க தான் கதைல ஒரு ட்விஸ்ட். அரசாங்கம் நடத்தும் சந்தைகளே இனி இருக்காது. அரசு நிர்ணயம் செய்யும் விலையும் இருக்காது.
உதாரணமா, நீங்க ஒரு பொருளை தேடுகிறீர்கள். அந்த பொருள் எங்கும் கிடைக்கவில்லை. தேடித்தேடி கடைசியில் ஒரு இடத்தில் அந்த பொருள் இருக்கிறது என்று தெரிகிறது. அங்க அந்த பொருளின் விலை அதிகமா இருக்கிறது என்று தெரிஞ்சாலும், அலையமுடியவில்லை இங்கேயே வாங்கி விடுவோம் என்று வாங்குவோம் தானே. இது தான் ஸ்டட்டர்ஜி. விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக எல்லா பொருளையும் கொள்முதல் செய்து விட்டால் , செயற்கையான ஒரு தட்டுப்படாடு உருவாகும். மக்களும், சரி எங்கேயும் இல்லை இருக்கிற இடத்துல் வாங்குவோம் விலை அதிகமாக இருந்தால் என்ன என்ற மன நிலைக்கு வந்து விடுவார்கள். இது தான் கார்ப்ரேட் யுக்தி. இந்த யுக்தியை கணித்து தான் விவசாயிகள் எல்லோரும் இவ்வளவு நாள் போராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஆக நமக்கும் சேர்த்து தான் போராட்டம். கன்னு இது வெறும் ட்ரைலர் மட்டும் தான். இது மாதிரி எக்கச்சக்க விஷயம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது. வேளாண் மசோதா விவசாயிகளுக்கா? கார்ப்ரேட் நிறுவனங்களுக்கா?
நிலத்தில் உழைக்கும் விவசாயிக்கு என்ன லாபம்? வெறுமனே வாங்கி விற்கும் முதலாளிகளுக்கு என்ன லாபம்? இந்த வித்தியாசம் தான் வேளாண் மசோதா.
