ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு ஆயிரமாவது நாளாக இல்லம் தேடி உணவு வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அன்னை VG சரவணன்.
சமூக ஆர்வலரான அன்னை VG.சரவணன் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இவர் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்கிற ஆவலில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆதரவற்ற ஏழை எளியவர்களுக்கு இல்லம் தேடி (மதிய உணவு) (இரவு உணவு) திட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் உணவு வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெரும் கொள்கை தலைவர்களின் ஒருவரான சமூக ஆர்வலர் அஞ்சலை அம்மாளை கொள்கைத் தலைவராக அறிவித்ததின் ஈர்ப்பால் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் ஆசியுடன் கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸிN.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படியும். தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து ( 1000 ) வது நாள் மதிய உணவு இரவு உணவு திட்டத்தை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வழங்கி வருகிறார். 1129 வதுநாளாக ஸ்ரீவைகுண்டம், கோட்டைக்காடு, கீழமங்கலக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 ஆதரவற்ற ஏழை எளியவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மேற்கு மாவட்டம் அன்னை VG.சரவணன் அவர்களின் சார்பில் மதிய உணவாக முட்டை குழம்பு சாப்பாடு வழங்கப்பட்டது.
