டிப்ரஷனை வெல்வது எப்படி??

“டிப்ரஷன்” என்று அழைக்கப்படும் மனச்சிதைவு நோய் .இதனை வெல்வது  எப்படி என்று சிவகங்கையை சேர்ந்த பொது நல மருத்துவரான Dr.A.B.ஃபரூக் அப்துல்லா நமக்கு  தெரிவித்துள்ள தகவல்கள் பின்வருமாறு..

1. ஒரே மாதிரி வாழ்கை முறையை மாற்ற வேண்டும்( try to avoid monotonous life style) அன்றாட வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன மாற்றங்களையும் மகிழ்ச்சியுடன் ரசிக்க வேண்டும்.

இருவாரத்திற்கு ஒருமுறையேனும் ஏதேனும் உறவினர் வீடுகளுக்கு சென்று வரலாம் .

இரண்டு மாதம் ஒருமுறையேனும் சிறு சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லலாம்.

(இப்ப கொரோனா காலத்துல முடியாது)

2. சிறுசிறு விஷயங்களையும் ரசிக்கப் பழக வேண்டும்( try to appreciate small things , which are so big for our mind )புதிதாக வெளியிடப்பட்ட இசைக்கோர்வை,வீட்டு பூந்தொட்டியில் அன்று மலர்ந்த ரோஜாப்பூ,சிறிது நேரமே தோன்றும் வானவில்,அம்மா / மனைவி செய்த புதிய வகை சிற்றுண்டி,குழந்தையின் புன்னகை.

3. ” தான்” என்ற அகந்தை( ego is the gateway for depression ) எண்ணம் எல்லாம் தன்னால் தான் நடந்தது.நான் இல்லையேல் எதுவும் இல்லை என்ற எண்ணம் கொண்டோரே பின்னாளில் மனத்தாழ்வு நிலைக்கு செல்கின்றனர்.

வீட்டில் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் உரிய மரியாதை கொடுத்து கூட்டு முயற்ச்சியால் வளர்ச்சி காண்கிறோம் என்று நினைப்பதே மனதுக்கு நல்லது.

4. தோல்விகள் நல்லது என்று நம்ப வேண்டும் .

வெற்றி பெற்ற யாரும் எடுத்த எடுப்பிலேயே அந்த நிலைக்கு வரவில்லை. பல தோல்விகளுக்குப் பின்பே இந்த நிலையை அடைந்திருப்பார் என்ற அறிவு வேண்டும். காதல் தோல்வி/ தொழில் தோல்வி/ திருமண தோல்வி இப்படி எதில் தோற்றாலும் அதற்குப் பின்பும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்ப வேண்டும்( defeats are not permanent , victories too)

5. மது / புகை ( getting away from addictive habits) இவையிரண்டிலும் இருந்து எப்போதும் விலகியிருப்பது நல்லது. மனத்தாழ்வு நிலையில் இந்த போதை வஸ்துக்களுக்கு அடிமையாகிவிட வாய்ப்புள்ளது.

6. ஆன்மீக நாட்டம்( spirituality) இறை வழிபாடு முதலியவை மனதை சாந்தப்படுத்தும் . பிறருக்கு உதவிகள் செய்வதில் அதிக கவனம் செலுத்தலாம்.

இருப்பினும் நமது ஆன்மீகம் பிறரது சுதந்திரத்தில் மூக்கை நுழைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் எழுவது நல்லது. ( இரவு 10 முதல் காலை 6 வரை) ( sleep hygiene)

8. எதையும் ஆக்கப்பூர்வமாக( positive thoughts) அணுகுவது மனதுக்கு நல்லது. எதிர்மறை எண்ணங்கள்( negative feeling) இருக்கலாம். ஆனால் அதுவே எப்போதும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

கடைசி பாய்ண்ட் ரொம்ப முக்கியமானது

மனம் சோர்வாக உணர்ந்தாலோ

மனத்தாழ்வு நிலையை அடைந்தாலோ

எதிர்மறை எண்ணங்கள் தற்கொலை எண்ணம் உட்பட தோன்றினாலோஉடனே மன நல மருத்துவரை உடனே அணுக வேண்டும் . அவர் தரும் மருந்துகளை முறையாக எடுக்க வேண்டும்.

மனநல சிகிச்சை எடுப்பதில் வெட்கமோ காலதாமதமோ தேவையற்றது.உடல் நலத்தை பேண காட்டும் அக்கறையை மனநலத்தை பேணவும் காட்ட வேண்டும்.உடல் நோய்களைப் போல

மனநோய்க்கும் மருந்து உண்டு என்று தெளிவோம்.உடலைக் காப்பது போலமனதையும் காத்துக் கொள்வது நல்லது.

Exit mobile version