சென்னை மணலியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வகுப்பறையில் மேல்தள சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்ததால் பெரும் அச்சம் ஏற்பட்டது.
மணலி பாடசாலை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் பெய்த கன மழையால் இரண்டாம் வகுப்பு அறை கட்டிடத்தில் மேற்கூரையில் இருந்து மழைநீர் சொட்டியது. இதனால், அந்த வகுப்பறையில் படித்த மாணவர்களை வெளியேற்றி அறையை பூட்டி வைத்தனர்.
இதனையடுத்து, இன்று காலையில் பூட்டி கிடந்த வகுப்பறையில் இருந்த பிளாஸ்டிக் சேர் எடுக்க வந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சேரை எடுக்கும் போது தீடீரென பள்ளி வகுப்பறை மேல்தள சிமெண்ட் பூச்சு உடைந்து விழுந்தது. இதனால் பள்ளி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக அங்கு மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.