முத்தமிழ் அறிஞர் !!!

தமிழக  மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்பட்ட கருணாநிதி தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத  சக்தியாக விளங்கினார்.

தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பின் பிரதிபலிப்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர்  என்று அழைக்கப்பட்டார்

அவர் கலந்து கொண்ட கூட்டங்களில் அறிவுப்பூர்வமாகவும், நகைச்சுவையுடனும் பேசிய பல பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பிரபலம் அதில்    ஒன்று  பச்சையப்பன் கல்லூரி  இலக்கிய விழாவில் அமைந்த பேச்சு 

பச்சையப்பன் கல்லூரியிலே ஒரு இலக்கிய விழா. கருணாநிதி முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அது தேர்தல் சமயம். திமுக ஒரு அணியிலும், காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரணியிலும் இருந்தன.அரசியல் பேசக்கூடாது என்று தெளிவாக கூறி விட்டனர். இலக்கிய உரையை நிகழ்த்தி உரையின் இறுதிக்கு வந்த கருணாநிதி, உரையை முடிக்கும் முன்பாக, “தேர்தல் வரவிருக்கிறது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உணவருந்தி முடிந்ததும் அனைவரும் ‘இலையை தூர போட்டு விட்டு கையை கழுவி விடுங்கள்’ ”என்று அவருக்கே உரித்தான  நடையில்  சொல்லிவிட்டு நடந்தார்.அரங்கமே அதிர்ந்தது.

அதன் அர்த்தம் அப்போது நடைபெறப் போகின்றதேர்தலில்  அதிமுகவின் இரட்டை இலையை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசின் கை சின்னத்தை கழுவி விடுங்கள்   என்பது ஆகும்

Exit mobile version