யார் இந்த மோடி… 20 ஆண்டு அரசியல் பயணத்தை தேடி…

PM Modi

2014 அரசியல் களத்தில் பா.ஜ.க சார்பில் புதியதொரு முகமாய் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வெண்ணிற அடையாளம் கொண்ட தாடி..மறுபக்கம் அனைவருக்கும் பரிசியமான காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.இருவருக்கும் நடந்த போட்டியில் வெற்றி பெற்று 2014 ம் ஆண்டு, மே மாதம் 24 ம் தேதி செங்கோட்டையில் ஏறி… “மோடி என்னும் நான்” என்று கர்ஜித்தது அந்த குரல்.

யார் இந்த மோடி..வெண்ணிற அடையாளம் கொண்ட தாடி…

பள்ளி காலம் முதல் தொடர்ந்து R S S அமைப்பு மற்றும் இந்தியாவின் மீது உள்ள பற்றாலும்,R S S,ஜனசங்கம்,ஜனதா கட்சி போன்ற அமைப்புகளில் ஆர்வமாய் உள்புகுந்து அதில் செயல்பட்ட ஆளுமை மற்றும் தலைவர்களிடம் உறவை வளர்ந்து கொண்டார்,குறிப்பாக அத்வானியின் சீடனாகவே வலம் வந்தார் மோடி.அதனால் தான் மோடி என்னும் ஒருவர் 1989 ம் ஆண்டு R S S அமைப்பில் இருந்து பா.ஜ.கட்சிக்குள் அடி எடுத்து வைத்து,தான் பிறந்த குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க நிர்வாக செயலாளராகவும்,பொது செயலாளராகவும் மோடிக்கு அத்வானி பதவிகள் வழங்கி 1990 ல் நடந்த ரத யாத்திரையில் தன்னுடனே வைத்து கொண்டார் அத்வானி.மோடியின் வளர்ச்சியை பார்த்து பா.ஜ.கட்சிக்குள்ளே பல பூகம்பங்கள் வெடிக்க,குஜராத் அரசியலில் இருந்து மோடி விலகி.. உத்திர பிரதேசத்தில் மேலிட பதவி வகித்தார்.1995 இல் கேசுவாய் பட்டேல் பா.ஜ.க சார்பில் குஜராத்தில் முதல்வரான போது,மீண்டும் மோடி குஜராத்தில் அடி எடுத்து வைத்தார்.இதுவே மோடியின் அரசியல் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்து குஜராத்தில் பா.ஜ.க பொது செயலாளர் ஆனார்.கேசுவாய் பட்டேல் ஒரு சில காரணங்களால் சிறிது காலத்தில் பதவி விலக அத்வானியின் உதவியால் மோடி குஜராத்தில் முதல்வர் ஆனார்.ஆனால் அப்பொழுது மோடி சட்டமன்ற உறுப்பினராய் இல்லாதபோது அவர் மீது பல கேள்விகள் எழுந்தது.இதனால் ராஜ்கோட் எம்.எல்.ஏ வஜூபாய் வாலா மோடிக்காக தனது பதவியை விட்டுக்கொடுத்து விலக,அந்த இடைத்தேர்தலில் மோடி வெற்றி பெற்று அசத்தினார்.அதன் பிறகு போத்ரா ரயில் எரிப்பு,குஜராத் மத கலவரங்கள் வெடிக்க,இதனால் மோடி பதவி விலக நேர்ந்தது.அப்போதைய பிரதமர் ராஜ்பாய் மோடிக்காக பிரச்சாரம் செய்து மீண்டும் அவரை முதல்வர் பதவியில் அலங்கரிக்க செய்தார்.5 ஆண்டுகள் பதவிக்கு பிறகு மீண்டும் 2007 இல் மோடி போட்டியிட,அதிலும் அவருக்கே வெற்றி கிடைத்தது.2012 இல் 3 வது முறை ஆட்சி அமைத்து மோடியின் ஆட்சியில் சிறந்த நலத்திட்டங்கள் நிறைவேற, குஜராத்தின் வளர்ச்சி நாயகன் என்று நாடு முழுவது அவர் பெயர் பரவ ஆரம்பித்தது.

அடுத்தடுத்து 3 முறை மோடி ஆட்சி குஜராத்தில் அமைய,பா.ஜ.க மற்றும் R S S அமைப்பு மோடியை நாளைய பிரதமர் என்று அழைக்க,அந்த நேரத்தில் வாஜ் பாய் பா.ஜ.கவில் இருந்து ஓய்வு பெற்றார்.அப்பொழுது பா.ஜ.க விற்கு ஒரே நிழலாக இருந்த மோடி, 2014 இல் பிரதமர் பதவிக்கு போட்டியிட மோடியை பா.ஜ.க முடிவு செய்தது.அந்த தேர்தலில் 10 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் பா.ஜ.க மோடி தலைமையில் ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபித்தது.அதன் பிறகு மற்றொரு பெருமையும் மோடியை வந்து சேர்ந்தது,இதுவரை மோடி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் அவரே பெற்று சாதனையை தக்க வைத்தார்.அந்த 2014-2019 ஆட்சி காலத்தில் தான் எந்த ஒரு பிரதமரும் எடுக்காத ஒரு முடிவை எடுத்தார் மோடி..அது தான் 500,1000 தடை விதித்து புது 2000 நோட்டு அறிமுகம்,தலாக் பிரச்சினை,ஜம்மு-காஸ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து,ஒரு பாலின தாரம் போன்ற அனைத்திற்கும் மக்கள் எதிர்ப்பையும் மீறி மோடி அரசு சமாளித்து திறம்பட செயல்பட்டது.தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஒரு முறை 2019 இல் மோடி பிரதமர் பதவிக்கான தேர்தலை சந்திக்கிறார்…. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பா.ஜ.க மீது மத ரீதியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பா.ஜ.கவை வீழ்த்த திட்டமிட.. அனைத்தையும் தவிடுபொடியாக்கி 2019 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை அலங்கரித்து கடந்த ஓராண்டு கால கொரோனா பாதிப்பையும் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் செய்து வருகிறார்… பல்வேறு தரப்பு மக்கள் இவர் மீது மோசமான விமர்சங்களை முன் வைத்தாலும் எந்த ஒரு தேர்தலிலும் தோல்வியை பார்க்காது அரசியல் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் முடிவு பெற்று வீறு நடை போடுகிறாரு மோடி.. உலகை சுற்றி தேடி….

கட்டுரையாளர்:முகி

Exit mobile version