முகேஷ் அம்பானிக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?

ரிலையன்ஸ் நிறுவன தயாரிப்புகளுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது. இந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி உலக அளவில் முன்னணி பணக்காரராக திகழ்ந்து வருகிறார். முக்கியமாக  எண்ணை சுத்திகரிப்பு ஆலை, கேஸ் ஆலை, ஜியோ மொபைல் நெட்வொர்க் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் அவருடைய சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2007-ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின், 4.1 சதவீத பங்குகளை, மார்ச் 2007ல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விற்பனை செய்வது என முடிவு செய்தது.

இதையடுத்து, 2007 நவம்பரில், பங்குகள் விற்பனை செய்யப்பட்டது. 2009ல் ரிலையன்ஸ், பெட்ரோலியம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயுடன் இணைக்கப்பட்டது. இதில், பங்குகள் விற்பனைக்கு பின்னால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருப்பதை, பொதுமுதலீட்டாளர்கள் அறியவில்லை. இந்த நடவடிக்கை பங்குகள் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இது பொது முதலீட்டாளர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தது என இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை வாரியம் செபி கண்டறிந்து உள்ளது. 


இதனால் செபி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு, 25 கோடி ரூபாயும், முகேஷ் அம்பானிக்கு, 15 கோடி ரூபாயும், நவி மும்பை சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு, 20 கோடி ரூபாயும் மற்றும் மும்பை சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு, 10 கோடி ரூபாயும் அபராதமாக விதித்துள் ளது.

Exit mobile version