சிங்கப்பெண்ணே!

வரும் ஜூலை மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ள திருமதி உலக அழகிப்போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்கிறார், சென்னையை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி.

கொரோனாவால் இனி வாழ்க்கை அவ்வளவு தான். நாளை விடிந்தால் பார்க்கலாம். எழுந்து நடக்க கூட சக்தி இல்லாமல், இப்படியான மனநிலையில் இருந்த டாக்டர்.பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இன்று இந்தியா சார்பாக, திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்க உள்ளார்.

தினம் தினம் போராட்டமே வாழ்க்கை என 29 நாட்களை கையில் பிடித்துக் கொண்டு, மரணத்தின் வாசலை தொட்டு விட்டு, மீண்டு(ம்) வந்தவர் இன்று பல பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார்.


3000க்கும் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்ட திருமதி இந்தியா அழகிப்போட்டியில் 47 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, அதில் 2021ம் ஆண்டுக்கான மிஸ் இண்டர்நேஷனல் வோர்ட்ல்ட் கிளாசிக் இந்தியா பட்டத்தை வென்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இதே போட்டியில் Glamourous acheiver என்ற துணைப் பிரிவிலும் கூடுதலாக ஒரு பட்டத்தையும் வென்றிருக்கிறார் நளினி.

அண்மையில் கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நடந்திய பேஷன் ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார், நளினி. இவருடன் சிறப்பு விருந்தினர்களாக சின்னத்திரை பிரபலம் ராஜ்மோகன் – கவிதா ராஜ்மோகனும், சீரியல் நடிகை ஜனனியும் கலந்துக்கொண்டனர்.


அதே போல், திருச்சி சக்தி ரோட்டரி சங்கம் மாவட்ட அளவில் பெண்களுக்கான ரோட்டரி இளைஞர் தலைமை விருது – 2022 விழாவில் சிறப்பு விருந்தினராக பிளாரன்ஸ் ஹெலன் நளினி கலந்துக்கொண்டு, வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

சென்னை மத்தியச் சபை சார்பாக புனிய வின்சென்ட் தே பவுல் ஆலயத்தில் மகளிர் பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு, சிறப்பு உரையாற்றினார்.

மகளிர் தினத்தையொட்டி MCC கல்லூரியில் நடந்த விழாவில், “தன்னம்பிக்கை இருந்தால் பெண்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ளலாம்” என்ற பீனிக்ஸ் பெண்மணி நளினி, தான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த கடினமான நாட்கள் குறித்து மாணவிகளிடம் பகிர்ந்துக்கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார், நளினி.

தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள். எப்பொழுதும் நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள். ஒரு நாள் நிச்சயம் வெற்றி அடைவீர்கள். உங்களை ஒரு வட்டத்திற்குள் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களின் இலக்கை அடைவதற்கு நீங்கள்தான் ஓடவேண்டும் உங்களின் மீது நம்பிக்கை வைத்து வாருங்கள் ஒன்றாக முன்னேறலாம் என நளினி பேசியது, மாணவிகளுக்கு எனர்ஜி டானிக்காக இருந்தது.

பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் பிளாரன்ஸ் நளினி பல துறைகளில் ஈடுபட்டு முத்திரை பதித்து வரும் நிலையில், இடையில் கிடைத்த இந்த அழகிப் போட்டி வாய்ப்பையும் சரிவர பயன்படுத்தி சாதித்துள்ளார்.

திருமதி உலக அழகிப்போட்டியிலும் நளினி வெற்றிப் பெற செய்தியலை சார்பாக வாழ்த்துகள்!

Exit mobile version