இயற்கை மருத்துவத்தின் அற்புத மருந்து, தூதுவளையின் நன்மைகள்!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது சான்றோர் வாக்கு. இன்றைய சூழலில், எங்கு சுற்றிலும் நோய்களின் பிடியில்தான் மனிதகுலமே உள்ளது. அப்படி பார்த்தால், இன்றைய காலகட்டத்தில் செல்வம் இல்லாத வாழ்வையே, நம்மில் பலரும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

மனித குலத்தை அல்லல் பட வைக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தியும், நோய்கள் வராமல் தடுத்தும் ஆரோக்கியமான வாழ்வை வாழ வைப்பதில், இயற்கை மருத்துவம் முதன்மையானது. இதனால்தான் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பர்ய இயற்கை மருத்துவத்தைதான் நமது முன்னோர்கள் காலங்காலமாக பின்பற்றி வந்தனர். காலப்போக்கில் இவற்றை நாம் மறந்துவிட, மீண்டும் தற்போது இயற்கை மருத்துவம் எழுச்சி பெற்று வருகிறது. குறிப்பாக, இந்தக் கொரோனா காலகட்டத்தில், நம்மில் பலரும் இயற்கை மருத்துவத்தை நோக்கி திரும்பிவருகிறோம். மேற்கத்திய நாடுகள் யாவும், கிருமிநாசினிகளை செயற்கையாக தயாரித்து விற்பனை செய்துவரும் நேரத்தில், நம் வீடுகளில் வேப்பிலையும் மஞ்சளும் உணவிலேயே அங்கமாக இருக்கின்றது.

நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கத்தியின்றி ரத்தமின்றி சிகிச்சை அளிக்கும் பாரம்பர்ய மருத்துவங்கள் பல இருக்கின்றன என்றாலும், இப்போதுதான் நாம் அவற்றின் அருமை அறிந்து அதனை நாடிச்செல்கின்றோம் என்றே சொல்லலாம். இதன் அருமை தெரியத்தொடங்கியிருந்தாலும்கூட, ஆங்கில மருத்துவத்துக்கு கிடைத்திருக்கும் அளவுக்கு இயற்கை மருத்துவத்துக்கு மக்கள் மத்தியில், முழுமையாக நம்பிக்கை வரவில்லை. காரணம், இயற்கை மருத்துவத்தில், முறையாக பயின்று பதிவுசெய்த இயற்கை மருத்துவ நிபுணர்கள் மற்றும் தரமான மருந்துகள் கண்டறிவது சவால் நிறைந்ததாக உள்ளது.

இப்படியான சவால்களுக்கு இடையே, முறையான ஒரு நிபுணரின் வழியாக, தூதுவளையின் நன்மைகளை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்.

குறிப்பிட்டு தூதுவளையின் நன்மைகளை இங்கே முன்வைக்க, ஒரு காரணம் இருக்கிறது. அது, கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் இந்த நேரத்தில், ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளில் மிகவும் முக்கியமானது தூதுவளைதான். காரணம், கொரோனாவால் ஏற்படும் சிக்கல்களில், முக்கியமான சுவாசம் சார்ந்த பல பிரச்னைகளை தடுக்கும் ஆற்றல், தூதுவளையில் இருக்கிறது. நாம் அனைவரும் அறிந்தது போலவே இருமல், சளி, ஜலதோஷம் போன்றவற்றை குணமாக்குவதில், இதற்கு முக்கியப் பங்கு உண்டு.

இதன் பிற நன்மைகளை இங்கே பரிந்துரைக்கிறார், இயன்முறை மருத்துவர் பிருந்தா.

கட்டுரையாளர்:ஜெ.நிவேதா

Exit mobile version