மனு தர்மம் கூறுவது என்ன ?

மனு தர்மத்தின் கருத்துகளும் அதனால் விளைந்திருக்கும் சர்ச்சைகளும்.

மனு நீதி என கூறப்படும் மனு தர்மம் ஹிந்துக்களின் சட்டப்புத்தகம் என கருதப்பட்டு வந்தது. இன்றைய வளர்ந்த சமூகத்தில் அனைவரும் இதை மறந்திருக்க கூடும். இப்படி ஒரு புத்தகம் இருக்கின்றதே என்று கூட சிலர் கேட்கலாம். அனால் இன்றளவும் இதை மதித்து பாதுகாக்கும் ஹிந்துக்கள் பலர் உள்ளனர். இது இந்தியாவின் பழமையான சட்ட குறிப்புகளில் ஒன்றாகும். மனு நீதியின் காலத்தை கி.மு.2300ல் வைத்துச் சொல்லும் கருத்து ஒருபுறம் (R.S.Vaidyanatha Iyer, 1976) மற்றொரு பக்கத்தில் அதுஅவ்வளவு தொன்மையானதாக இருக்க முடியாது, கி.மு.200 ஆக இருக்கலாம் (Max Muller) என்ற கருத்தும் இரு துருவங்களாக நிலவின.இப்படி ஒரு ஒருவர் ஒரு ஒரு காலங்கள் சொல்வதால் பொதுவாக கி.பி . 500 என கருத்திக்கொண்டனர். இந் நிலையில், 1902ல் பிரெஞ்சு அகழ்வாராய்ச்சியாளர்கள்கண்டெடுத்த- பாபிலோனை ஆண்டு வந்த (கி.மு.2128) ஹமுராபி மன்னனின் (King Hammurabi) சட்டமான- ஹராபி சட்டத் தொகுப்பு(Code of Hammurabi) மனு நீதியின் காலம் பற்றிய விவாதங்களின் திசைகளைத் திருப்பி விடுவதாயிற்று.

இப்படி மனுநீதி என்னும் இந்த புத்தகத்தை அப்போதிலிருந்தே சர்ச்சைகள் தொடர்ந்து தான் வந்துகொண்டு இருந்தது. தற்போது இந்த மனுநீதி புத்தகத்தை தடை செய்யவேண்டும் என சிலர் கூறி வருகின்றனர் அதனை சிலர் எரித்திடவேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அனால் மருதரப்பில் இந்த புத்தகத்தில் உள்ள கருத்துகள் இன்று உள்ள சமூகத்தில் செல்வதில்லை இந்த புத்தகத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை இதனை ஏன் தடை செய்யவோ எரிக்கவோ வேண்டும் என கூறுகின்றனர்.

இதனை நாட்கள் கழித்து இந்த புத்தகத்தை தோண்டி எடுத்து தடைசெய்யவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது விடுதலை சிறுத்தை கட்சியினர் தான், இந்த புத்தகத்தில் சாதியை மேம்படுத்தி கூறும் கருத்துகள் அதிகமாக உள்ளதாகவும் இந்த புத்தகத்தில் பெண்களை அசிங்கபடுத்தும் வகையில் பல கருத்துகள் அமைந்திருப்பதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகிட்னரானர். மேலும் இதுபோன்ற புத்தகங்களும் இது போன்ற கருத்துகளுமே இன்றைய ஆன் பெண் அடிமை, சாதி வெறி, மத வெறி போன்ற பல சமூக பிரெச்சனைகளுக்கு மூலதனம் என்றும் இவர்கள் நம்புகின்றனர்.

இதை குறிப்பிட்டுருக்கு சில நீதிகளை பாப்போம். இதில் முன்னுரையை கடந்த பின்பு உள்ளடக்கம் இருக்கு. அதில் பன்னிரெண்டாம் அத்தியாயம். இரண்டாவது அத்தியாயம் பிரம்மச்சர்யம்:- பூணுல் அணிதல் (உபநயனம்), குருபக்தி, வேதம் படித்தல், வழிபாட்டு முறைகள் மற்றும் குருகுல நிலை பற்றி விவரிக்கிறது. மூன்றாவது அத்தியாயம் அந்தணர் தருமம்:-இல்லறத்தின் மேன்மைகள், திருமண உறவுகள், யக்ஞம், விருந்தோம்பல், பலியிடுதல், இறந்த முன்னேர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர் கடன்கள், தகாத உறவுகள், கலப்புத் திருமணங்கள், விலக்க வேண்டியவைகள், வேதம் ஒதுதல், ஒதுவித்தல், ஒழுக்க நெறிகள், உணவு முறைகள், தூய்மை, பெண்டிர் தொடர்பான விதிகள், உண்ணத்தக்கவை, தகாதவைகள், விசேட காலங்களில் புலால் உண்ணல், பிறப்பு-இறப்பு தீட்டு விதிகள், பெண்களுக்கு உகந்தவைகளும், விலக்கத்தக்கவைகளும் தொடர்பான விதிகள்.ஆறாவது அத்தியாயம் வானப்பிரத்தம் & துறவறம்:-காட்டில் வாழ்தல், உணவு முறைகள் ,ஒழுக்க விதிகள், செபம்,தவம் செய்தல்,வேத வேதாந்த விசாரம் செய்தல் தொடர்பான விதி முறைகள். ஏழாவது அத்தியாயம் சத்திரிய தருமம்:-மன்னர்களின் மாண்புகள் & பண்புகள், கடமைகளும் பொறுப்புகளும்,அரசின் நீதிநெறி சட்டங்கள்,அரசியல் சிந்தனைகள்,அரசின் அதிகாரிகள், தலைநகரம், போர் அறம், உள்நாட்டு நிர்வாகம்,வரி விதித்தல், பகை அரசர்களின் பலம் பலவீனம் அறிதல், பகை நாட்டை முற்றுகையிடல், போர் செய்யும் முறைகள், வெற்றி வாகை சூடல், புலவர்களுக்கு பரிசு வழுங்குதல், வேதம் அறிந்த அந்தனர்களுக்கு தானம் வ்ழங்குதல், வேள்விகள் செய்தல், சமூகத்தில் வர்ணாசிரம தரும நெறிகள் காத்தல் பற்றி விவரிக்கிறது. எட்டாவது அத்தியாயம் நீதிநெறிசட்டங்கள்:-குடிவகுப்பு, நீதிமன்றம், உடைமைகள், புதையல், களவுகள், கடன்கள், வட்டி, கொதுவை, காப்பு பொருள், பொருள் விற்பனை, பொருள் விற்பனை விலை நிர்ணயம்,அடிதடி கலவரம், பலாத்காரம், நிலத்தகராறு, நட்ட ஈடு,மான-நட்ட ஈடு, உடன்படிக்கைகள், நம்பிக்கை துரோகம், செய்கூலி, கலப்படம் தகாத செயல்கள் பற்றி விவரிக்கிறது. ஒன்பதாவது அத்தியாயம் வைசியர், ஆடவர் & பெண்டிர் அறம்:-திருமணம்,மகப்பேறு,பாகப்பிரிவினை,கவறாடல் முதலிய குற்றங்களுக்கு தண்டனைகள் மற்றும் வைசியர்களின் கடமைகள் பற்றி விவரிக்கிறது. பத்தாவது அத்தியாயம் வைசியர், ஆடவர் & பெண்டிர் அறம்:-திருமணம்,மகப்பேறு,பாகப்பிரிவினை,கவறாடல் முதலிய குற்றங்களுக்கு தண்டனைகள் மற்றும் வைசியர்களின் கடமைகள் பற்றி விவரிக்கிறது. பதினோராவது அத்தியாயம் குற்றங்களும் அதற்கான கழுவாய்களும் :- தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களுக்கு செய்ய வேண்டிய கழுவாய்கள், யாகம், பாவங்களின் விளைவுகள், குற்ற வகைகள், உண்ணத்தகாதவைகள், மறுபிறப்பு, முக்குணங்கள் பற்றி விளக்குகிறது. கடைசியான பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் வினைப் பயன்கள்:- நல்வினை தீவினைகளும் அதன் விளைவுகளும், முக்குணங்கள், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களின் வாய்மை, ஆன்ம ஞானம், முக்திக்கு வழிகள் முதலியவைகளை விவரிக்கிறது.

இதுவே இந்த மனு தர்மம் அதனில் கூறப்படும் கருத்துகள்.

Exit mobile version