திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வெள்ளை யானை உலா!

திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்பிரகாரத்தில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை உலா வந்தது

ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார்.

இதை நினைவு கூறும் வகையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

கரோனா ஊரடங்கு என்பதால் பகல் 11.30 மணிக்கு நடைசாத்தப்பட்டு, மீண்டும் மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

தொடர்ந்து மாலை 5.40 மணிக்கு கோவில் யானை தெய்வானையின் உடல் முழுவதும் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்கசப்பரத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பு சேரமாள்பெருமானும், மாணிக்கவாசகரும் எழுந்தருளி காட்சி கொடுத்தனர்.

Exit mobile version