ஜார்ஜ் புஷ் வெற்றியடைந்தது எப்படி? ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தது எப்படி?

உலக நாடுகள் அனைத்தும் ஆர்வமாக எதிர்பார்க்கும் ஒரு தேர்தல் என்றால் அது அமெரிக்க அதிபர் தேர்தல் தான். 2021 ஆம் ஆண்டின் அதிபருக்கான தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. அமெரிக்காவில் அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்பதைப் பற்றி பார்போம். 
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய் கிழமை அதிபர் தேர்தல் நடைபெறும். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி, குடியரசு என இரண்டு கட்சிகள் உள்ளது.


 அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளது. 50 மாகாணத்திற்கும் சேர்த்து மொத்தமாக 538 இடங்கள் இருக்கும். அந்த மாகாணத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப இடங்கள் பிரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக மக்கள் தொகை அதிகமுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் 55 இடங்கள்கள், மக்கள் தொகை குறைவாக உள்ள அலாஸ்கா மாகாணத்தில் 3 இடங்கள் என ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஒரு மாநிலத்தில் எந்த கட்சியின் வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிடுபவரை விட அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களுக்கு அந்த மாநிலத்தின் மொத்த சீட்டுகளும் கொடுக்கப்பட்டுவிடும். உதாரணமாக, கலிபோர்னியா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் 49.9% வாக்குகள் பெற்றுள்ளார்.  ஜனநாயக கட்சி வேட்பாளர் 50.01%வாக்குகள் பெற்றுள்ளார். இப்பொழுது கலிபோர்னியா மாகாணத்தின் 55 இடங்களும் ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிடும். மெய்ன் மாநிலத்தில் மட்டும் அந்தந்த கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் இடங்கள்கள் பகிர்ந்து கொடுக்கப்படும். 


எலக்ட்ரோல் காலேஜ்

மக்கள் நேரடியாக ஓட்டு போட்டு அதிபரை தேர்ந்தெடுப்பது கிடையாது. எலக்ட்ரோல் காலேஜ் என்றொரு முறை மூலம் தான் அதிபர் தேர்தெடுக்கப்படுகிறார். மொத்தமாக உள்ள 538 இடங்களுக்கு இணையாக 538 எலக்ட்ரோல் காலேஜ் உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் முதலில் 270 இடங்கள் பெறுபவர்கள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவர். எனவே, வாக்குளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், 270 எலக்ட்ரோல் வாக்குகளை பெற முடியவில்லை என்றால் அவர் அதிபராக முடியாது. இதுவரை இரண்டுமுறை இப்படி நடந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு குறைந்த வாக்குகள் பெற்றிருந்தாலும் ஜார்ஜ்புஷ் வெற்றியடைந்ததும் இப்படி தான். 2016 ஆம் ஆண்டு அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும்  ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்ததும் இப்படி தான். 

 இரண்டு கட்சிகளிலும் இருந்தும் அந்தந்த கட்சி சார்பாக அதிபர் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அது அவ்வள்வு எளிதல்ல. ஒரு கட்சி சார்பாக ஒருவரை, அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமெனில், முதலில் அவர் அதிபர் வேட்பாளர்களுக்காக நடத்தப்ப்டும் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எந்த வேட்பாளர் முதலில் 270 எலக்ட்டோல் காலேஜ் ஓட்டுகளை பெற்று முன்னிலையில் வருகிறாரோ அவர் தான் அமெரிக்க அதிபர். 


மேலும் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும். 35 வயதை தாண்டி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருக்க வேண்டும். அர்னால்டு அதிபராக போட்டியிட முடியாததற்கு  அவர் அமெரிக்காவில் பிறந்திருக்க வில்லை என்பதே காரணம். மேலும் ஒருவர் அமெரிக்காவின் அதிபராக இருமுறை மட்டுமே பதவியேற்க முடியும். ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா 2009, 2014 என இருமுறை பதவிவகித்து விட்டதால் அவரால் இனி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. 


இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் ஐனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் போட்டியிட்டனர். இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

Exit mobile version