வினை தீர்க்கும் விநாயகர் சிலை செய்யும் கைவினை கலைஞர்களுக்கு கொரணா செய்த வினை?

விழாக்காலத்தை கொரணா அலங்கோலமாக்கியதால் நிகழ்காலம் நிலை தடுமாறி நிற்கும் 200 குடும்பங்கள்…

உடல் ரீதியாக தாக்குதலை மேற்கொள்ளும் வைரஸ்கள் ஒரு புறம் இருக்க மறுபுறம் உழைப்பையும் பொருளாதாரத்தையுக் புரட்டி போட்டு வருகிறது கொரணா எனும் கொடிய வைரஸ்.இந்த நிலையில் கோவையில் சுமார் 200 குடும்பஙகளின் வாழ்வாதாரத்தை தன்னகத்தே கொண்டகைவினை தொழிலும் கொரணாவின் இலக்குக்கு தப்பவில்லை.

விநாயகர் சதூர்த்தி , கிருஷ்ணர் ஜெயந்தி மட்டுமல்லாது கொலு வைத்து நடைபெரும் ஆன்மீக நிகழ்ச்சி என அனைத்துக்கும் தேவையான சாமி சிலைகளை கைவினை கலைஞர்கள் வடிக்கின்றனர். ஆனால் இன்று சிலை வடிப்போரின் வாழ்க்கையில் கண்ணீர் வடிக்க வைத்துவிட்டது கொரணா…முழுவதும் ஒரு வருட உழைப்பு கொடுத்து உறுவாக்கப்படும் சிலைகள் ஒரு மாத நிகழ்ச்சியை நம்பியே இருந்துவருகின்றன.

சுமார் 10 லட்சம் ரூபாய் அளவிலான பொருளாதார இழப்பு இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ளது. விநாயகர் சதூர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வருகின்றநிகழ்வுஆகும்,,, ஆனால் கோவிட் 19 அனைத்து கோவில் வாசல்களையும் அடைத்ததால் , சிலை விற்பனை கதவும் தற்சமயம் வரை திறக்கபடாமலே இருக்கின்றது. அயல் நாடுகளில் உள்ளவர்கள் கூட அவ்வபோது சிலைகளை வாங்கி சென்ற நிலையில் இன்று ஒன்று கூட விற்கப்படாமல் முற்றிலும் தேங்கி கிடக்கின்றன.

ஏற்கனவே கடந்த வருடம் வடிக்கப்பட்ட சிலைகள் ஒருபுறம் விற்காமல் இருக்க, மறுபுறம் சிறு சிலைகள் மட்டும் ஒரு நம்பிக்கையில் செய்து வருகின்றனர் இவர்கள். ஒரு வருட உழைப்பும் வீணாகி எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது இவர்களுக்கு.


ஆன்மீக விழா காலத்தை ஆட்கொண்ட கொரணா கைவினை கலைஞர்களின் வாழ்க்கையை அலங்கோலமாக்கி அட்டம் காண வைத்துள்ளது என்றால் மிகையில்லை. வினையை தீர்க்கும் விநாயகன் சிலையும் சிலை செய்யும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கைக்கு வினையாக வந்த கொரணா விரைவில் விடைபெற்றால் மட்டுமே எப்போது விடியும் என்ற கைவினை கலைஞர்களின் விணாவிற்க்கும் விடைகள் கிடைக்கும்

Exit mobile version