திருப்பத்தூர் நகர பா.ஜ.க. பிரமுகர் கலிகண்ணன் கடந்த 24-ந் தேதி கடத்தி ஊத்தங்கரை அருகே வேப்பாளம்பட்டி இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து முடித்து திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள எரிவாயு தகன மேடைக்கு எடுத்து வந்தனர்.
அப்போது அங்கு இருந்த பா.ஜ.க.வினர் போலீசாரிடம் பா.ஜ.க. பிரமுகர் உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டும். அவரது உறவினர்கள் வீட்டில் காத்திருக்கிறார்கள். எதற்காக நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்து வந்தீர்கள் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் வாசுதேவன், மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் மீது போலீசார் பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும், போலீசாரை தரக்குறைவாக பேசியதாகவும் உள்பட 5 பிரிவுகளில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.