வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ₹1 லட்சம் பரிசு

வங்கி கொள்ளையர்கள் பற்றி துப்புகொடுக்கும் பொதுமக்களுக்கு ₹1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கியில் பட்டபகலில் புகுந்த மர்மநபர்கள் வங்கி  ஊழியர்களை கட்டிப்போட்டு மயக்கமருந்து கொடுத்து வங்கியில் உள்ள நகை, பணம் ஆகியவற்றை நேற்று, கொள்ளையடித்து சென்றனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்து வருவதற்கு முன்பாகவே கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இதில் ₹20 கோடி மதிப்பிலான நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோ ஆதாரங்களை வைத்து போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வங்கியில் பணிபுரிந்த முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட அந்த வங்கி தற்போது போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த நிலையில், அரும்பாக்கம் வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு ₹1லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார். மேலும், கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கும் ₹1லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Exit mobile version