இன்று முதல் துவங்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு..!!

public exam
Tamil nadu school Students

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்குகிறது.

கடந்த சில மாதங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பட்டியலை வெளியிட்டது. அதை தொடர்ந்து பொதுத் தேர்வுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

சமீபத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. இந்நிலையில் இன்று முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வை மொத்தம் 9,55,139 மாணவ மற்றும் மாணவியர் எழுதுகின்றனர்.

மேலும் 30,765 பேர் தனி தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. அங்கு 3936 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நாளில் மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது.

மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு மைய வளாகங்களுக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version