பாளையங்கோட்டையில் தசரா திருவிழா: 12 அம்மன் கோவில் சப்பரங்கள் பவனி

தசரா திருவிழாவையொட்டி பாளையங்கோட்டையில் நேற்று 12 அம்மன் கோவில்களின் சப்பரங்கள் பவனி நடந்தது.

நெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதே போல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன், புது உலகம்மன் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழா தொடங்கி நடந்தது.

தீபாவளி திருநாளை முன்னிட்டு தசரா பண்டிகை களைகட்டி வருகின்றது. ஆனால் கொரோனவால் தேங்காய் புதைக்கவும், கற்பூரம் கொளுத்தவும், பழம் உடைக்க தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்த திருவிழாவில் 12 அம்மன் கோவில்களில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவினில் அமங்களுக்கு சிறப்பு பூஜைகளும், புலஸ்காரங்களும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 12 அம்மன் கோவில் சப்பரங்களும் பவனியாக பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு வந்து அணிவகுத்து நின்றன. நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடந்தது.

மேலும் சூரசம்ஹாரம் நடக்கும் இடத்திற்கு கலெக்டர் ஷில்பா வந்திருந்தார். அவர் அங்கு வந்திருந்த பக்தர்களை முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவேளை கடைபிடிக்கும் படியும் கேட்டுக்கொண்டார். இதேபோல் நெல்லை டவுனில் புட்டாபுரத்தி அம்மன் கோவில், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், முப்பிடாதி அம்மன், வாகையடி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், துர்க்கை அம்மன், தங்கம்மன், மாரியம்மன், சாலியர் தெரு மாரியம்மன் உள்ளிட்ட 30 கோவில்களிலும் தசரா திருவிழா நடைபெற்றது.

Exit mobile version