பெற்றோர் ஒன்று சேர 17 வயது மகன் எடுத்த விபரீத முடிவு..!!

Namakkal Student Death

பெற்றோர் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக 17 வயது மகன் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு மேகலா என்கிற மனைவியும் நர்மதா மற்றும் தருண் என்கிற மகள், மகன் உள்ளனர். ரவிச்சந்திரன் மற்றும் மேகலா இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தருண் தாய் மேகலாவுடன் இருந்து வந்தார். அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த அவர், தாய் மற்றும் தந்தை இருவரும் சேர்ந்து வாழ பல்வேறு முயற்சிகளை எடுத்ததாக தெரிகிறது. ஆனால் அது எதுவும் பலனிக்காம போனது.

இதன்காரணமாக தருண் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பெற்றோர் இணைந்து வாழ வேண்டும் என்கிற நோகத்தோடு தருண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version