43 மருத்துவர்கள் உயிரிழந்த தகவல் பொய்யானது அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தல் 77.8 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி முற்றிலும்தவறானது. இந்த மருத்துவர்கள் இறப்பு தகவலை இந்திய மருத்துவர்கள் சங்கமும் மறுத்துள்ளது. எனவே 

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை வெளியிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை வெளியிட்டு சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும்மருத்துவர்களின் மனஉறுதியை சீர்குலைக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version