தமிழகத்தில் 4 வது வார முழு ஊரடங்கு இன்றோடு நிறைவு! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தமிழக அரசின் உத்தரவின் படி, ஜுலை மாத ஞாயிற்றுகிழமைகளில் அமலாகும் கடைசி ஊரடங்கு இன்றோடு முடிவடையவுள்ளநிலையில், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என அரசு தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் 4 வது வார முழு ஊரடங்கு இன்றோடு நிறைவு! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் புதிய உச்சத்தினை அடைந்துவருகிறது. தற்போது வரை 2லட்சத்து 6 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை அதிகாரிகள் எடுத்து வந்தாலும் இன்னமும் கட்டுக்குள் கொண்டு முடியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் தவித்துவருகின்றனர்.

இந்த சூழலில் 6 ஆம் கட்ட ஊரடங்கில் மண்டலங்களுக்கு இடையேயான பொதுப்போக்குவரத்திற்கு தடை விதித்த தமிழக அரசு, சில தளர்வுகளையும் இதில் அமல்படுத்தியுள்ளது. அதோடு ஜுலை மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்ட்டு வந்த நிலையில், 4 வது வார முழு ஊரடங்கு இன்று அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், அவரச ஊர்திகள், அமரர் ஊர்திகள் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது. அதனை மீறி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட மற்றும் மாநில எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு கடுமையான சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையை பொறுத்தவரை 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஊடரங்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதியோடு முழு ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்கனவே தமிழக தலைமை செயலர் சென்னையை தவிர பிற மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதா? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

எனவே விரைவில் அடுத்த கட்ட ஊரடங்கு என்னவாகும் இருக்கும் என தமிழக அரசின் சார்பின் சார்பில் முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஊரடங்கில் எப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், போக்குவரத்தினை இயக்குவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு மற்ற துறைகளும் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டி உள்ள அனைத்து பணிகளையும் துரிதப்படுத்திவருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version