ஓசூரில் தனியார் நிதி நிறுவன கொள்ளையில் 6 பேர் கைது: ஐதராபாத்தில் தனிப்படை போலீசாரால் சுற்றிவளைப்பு

ஓசூரில் தனியார் நிதி நிறுவன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐதராபாத்தில் தனிப்படை போலீசாரால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் என்கின்ற தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று காலை பட்டப்பகலில் 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் அங்குள்ள ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் 96 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து கொள்ளை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

read more – பால் தினகரன் பல கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்

இந்நிலையில்,  இன்று அதிகாலை 3 மணியளவில் ஜிபிஎஸ் கருவிகள் உதவியுடன் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த ஆறு கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்தனர். ஹைதராபாத் அருகே சம்சாத் பூர் என்ற இடத்தில் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர் .  இவர்கள் அனைவரும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் . இவர்களிடமிருந்து 7 ஒரிஜினல் துப்பாக்கிகள் ( பிஸ்டல்), ரெண்டு கத்தி மற்றும் ரூ 12 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்த நகைகளை மீட்ட தமிழக காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

Exit mobile version