75 லட்ச ஏ.டி.எம் கொள்ளை விவகாரம்

திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை மூன்று நாட்களில் நெருங்கி விடுவோம் என வடக்கு மண்டல் ஐ.ஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நான்கு ஏ.டி.எம்.,களில் 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே கும்பல் தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது என வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாவட்ட அளவில் ஐந்து டி.எஸ்.பிக்கள் தலைமையில் 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தொழில்நுட்ப ரீதியாக ஏ.டி.எம் குறித்து அறிந்தவர்கள் எனத் தெரிவித்தார். அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் இந்த கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாகவும், குற்றவாளிகள் சில தடயங்களை விட்டுச் சென்றுள்ளதால் இன்னும் 3 நாட்களில் கொள்ளையர்களை நெருங்கி விடுவோம் எனவும் ஐஜி கண்ணன் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு வெளியேவும் சிறப்பு படைகள் கொள்ளையர்களை தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.  

Exit mobile version