17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞருக்கு போக்கோ சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி:
நீலகிரியில் கடந்த 2017 ம் ஆண்டு 12 ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை திருமணம் செய்வதாகக்கூறி ஆண்டனி வினோத் என்பவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு அடிக்கடி கருக்கலைப்பும் நடந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் துறையில் அளித்த புகாரின் பெயரில் ஆண்டனி வினோத்தை கைது செய்தனர். கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கானது உதகை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி அருணாசலம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
Read more – இன்றைய ராசிபலன் 28.01.2021!!!
17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகள் மற்றும் கருக்கலைப்பு செய்ததற்கு 20 ஆண்டுகள் விதிக்கப்பட்டது.மேலும், அந்த பெண் மற்றும் பெற்றோரை கொலை மிரட்டல் விடுத்ததற்கு 4 ஆண்டுகள் என மொத்தம் 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.