தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,564 பேருக்கு தொற்றும், தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தொட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
Read more – கொரோனா பரவல் எதிரொலி : வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியங்களை மூட உத்தரவு
மேலும், தமிழகம் முழுவதும் பிற மாநிலங்களை போல இரவு நேரத்தில் ஊரடங்கு அமல் படுத்துவது குறித்தும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே மருத்துவர் சங்கத்தின் சார்பில் 14 நாட்கள் கட்டாய முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.